ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான எண்பத்து நான்கு வயது வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025 அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவில் ஒரு பென்டிரைவைக் கொடுத்து புகார் அளித்தார். அதில் வயதான ஒருவர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன. அடுத்த நாளே அக்டோபர் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டாலும், அப்போதைய திமுக ஆட்சியில் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தீவிரமடைந்தது. 2026 ஆகஸ்ட் இறுதியில் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் குறைந்தபட்சம் ஒன்பது சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. வீரமணி தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுத்த சொகுசு பங்களாவில் சிறுமிகளை அழைத்து வந்து குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாந்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்திருந்ததாகவும், பின்னர் அது போலீசாரிடம் கிடைத்ததாகவும் தெரிகிறது. வீடியோவில் சிறுமிக்கு கைபேசி போன்ற பரிசுகளைக் கொடுத்து பின்னர் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இருந்தன.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!
வீரமணி விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெம் வீரமணி விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரமணி செய்த குற்றம், தொடர்புடையவர்கள் யார், பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் ஆஜராகி இருந்தார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை... விஷயத்தை மூடி மறைத்த அனைவரும் கூண்டோடு கைது?