திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 40 போலீசார் அடங்கிய குழுவையும் அமைத்து வகுற்றவாளியை தேடி வந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 10 நாட்களாகியும் இன்னும் குற்றவாளியை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு அந்த நபரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ரத்த காயங்களுடன் சிறுமி அவரிடமிருந்து தப்பி வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐயா.. அவனை எங்க கிட்ட குடுங்க..! வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கதறல்..!
சிறுமி நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சிறுமையை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு நயினார் கண்டனம்..!