தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள், புதிய முயற்சிகள் மற்றும் நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வின் தொடக்கம் மற்றும் இறுதி என இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வு என்று கூறியிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறு இன்றி பேரவையில் வாசித்தது மன நிறைவை தருகிறது என்று கூறினார். மாநில அரசு மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனது என்று கூறியுள்ளார். மாநில அரசு மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் என்பது மக்களாட்சி மாண்பை நிலை நாட்டும் வகையில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் விசில் புரட்சி..! அனைத்தும் அனைவருக்கும்... சட்டசபையில் ஆளுநர் உரை..!!
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது ஒருங்கிணைந்த இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆளுநர் அர்லேகர் குறிப்பிட்டிருக்கிறார். நாம் அனைவரும் இணைந்து பயணிக்க தொடங்கியுள்ளோம் என்பது மனதிற்கு நிறைவை தருகிறது என்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆளுநர் உரை... சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..!