பெருங்குடி குப்பைக் கிடங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இது உண்மையில் ஒரு சதுப்பு நிலமாக இருந்தாலும், கடந்த நாற்பது ஆண்டுகளாக சென்னை நகரத்தின் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு, குப்பைக் கிடங்கு என்று அழைக்கப்படுகிறது. சென்னை நகரம் ஒரு நாளைக்கு சுமார் 5000 மெட்ரிக் டன் குப்பையை உருவாக்குகிறது, இதில் பெரும்பகுதி பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் குவிக்கப்படுகிறது.
இந்தக் கிடங்கு, தென் சென்னையில் வாழும் மக்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏனெனில் இது சுற்றுச்சூழல் மாசுபாடு, மூச்சுத்திணறல், மற்றும் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

பெருங்குடி குப்பைக் கிடங்கு அப்பகுதி மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குப்பைகளின் குவிப்பால் ஏற்படும் துர்நாற்றம், காற்று மாசுபாடு, மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடு ஆகியவை மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் நோய்கள், மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்க இருந்து வருது இவ்ளோ தைரியம்! இது மக்களுக்கான ஆட்சியா? மக்களை வதைக்கும் ஆட்சியா? விளாசிய நயினார்
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பெருங்குடி, கொடுங்கையூரில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹய்யோ... அந்த பாசம் இருக்கே! ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பை நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்