கரூர் மாவட்டம் புகளூர் பகுதியின் நகராட்சி குழாயில் தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுப்பிய திரு. ரவி என்பவரின் வீட்டிற்கே சென்று, அவர் மீது புகளூர் நகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவரும், திமுக மாவட்ட சிறுபான்மை அணியின் அமைப்பாளருமான நவாஸ்கான் தாக்குதல் நடத்த இருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார்.
இந்த அராஜகத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவரை நேரில் சென்று சந்தித்து தைரியம் கூறிய கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகளை மன நிறைவுடன் பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.

தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவை குறித்து குரலெழுப்பியவரின் வீட்டிற்கே அடியாட்களுடன் சென்று தாக்குதல் நடத்துமளவிற்கு திமுகவினருக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்த பிறகும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட திமுகவினரைக் காப்பாற்றத் துடிக்கும் ஏவல்துறை தமிழகத்தின் பெருத்த அவமானம். தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை அடிமைகளைப் போல நடத்தும் திமுகவின் ஆணவத்தை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என கூறினார்.
இதையும் படிங்க: ஹய்யோ... அந்த பாசம் இருக்கே! ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பை நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

எனவே, கவுன்சிலர் பதவியைக் கையில் வைத்திருப்பதால் அத்துமீறிய நவாஸ்கான் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட ரவி குடும்பத்தாருக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அடிச்ச ஜாக்பாட்! புதிய பதவி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..