தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள நிர்வாக மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மூலம் திறமையான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து, அரசு நிர்வாகத்தில் திறம்பட பணியாற்ற வைப்பது முக்கிய நோக்கம். இவை தமிழ்நாடு அரசின் இணைந்த பொது பணி தேர்வு-II எனப்படும் தேர்வின் ஒரு பகுதியாகும்.

பதிவுத் துறையில் உதவி பதிவாளர், தொழிலாளர் துறையில் உதவி ஆய்வாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் மூத்த ஆய்வாளர், விசாரணை மற்றும் ஊழல் தடுப்பு துறையில் சிறப்பு உதவியாளர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. குரூப் 2 தேர்வில் நேர்காணல் இருப்பதால், விண்ணப்பதாரர்களின் தனித்திறன், தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான குரூப் 2, 2A தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 645 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள், முதல்நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இந்தந்த கேள்விகளா..!! தேர்வர்கள் சொன்னது என்ன..?
இதையும் படிங்க: லீக்கானதா குரூப் 4 தேர்வு வினாத்தாள்..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!