செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

GST கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்ப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடிக்கும் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த GST கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: கொஞ்சம் லேட் தான்.. இருந்தாலும் வரவேற்கிறேன்.. ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ப.சிதம்பரம் கருத்து..!!
இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) மாற்றம், அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு மீதான நிவாரணம் எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்கள் நீக்கம்.. நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்..!!