பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்து உள்ளது. பிறந்த குழந்தை முதல் மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் நிகழும் பாலியல் குற்றங்கள் பதற வைக்கிறது. இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் கூட நிகழும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், படிக்கும் இடத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் என எண்ணற்ற குற்றங்கள் நிகழ்கிறது.
அதுமட்டுமல்லாது ஆசிரியர்களே பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள், போதையில் முதியவர் என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் அப்படியான பல குற்றங்கள் நிகழ்வது பல்வேறு கேள்விகளை நமக்கு முன் வைக்கிறது.

தற்போது, திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடையாறு C.L.R.I.க்கு ப்ராஜெக்ட் தொடர்பாக மாணவி ஒருவர் சென்றுள்ளார். தற்போது அந்த மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். திருச்சியிலிருந்து ப்ராஜெக்டுக்காக சென்னை வந்திருந்த மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. காரில் கடத்திச் சென்று மூன்று பேர் தன்னை மிரட்டியதாக அபிராமிபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பின் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: மூவரும் குற்றவாளிகளே..!! கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் நிகழ்ந்துள்ள அடுத்த பாலியல் வன்கொடுமை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கும் போது தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும் என்றும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!