விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அரசியல் சாயல் கொண்ட அதிரடி படமாக உருவாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு முழு நேரமாக மாற உள்ள நிலையில், இப்படம் அவரது திரைப்பயணத்தின் முத்தாய்ப்பாக கருதப்படுகிறது.
ஆனால், படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை அதிகாரிகள் படத்தை பார்வையிட்டு, சில காட்சிகளில் மாற்றங்கள், வசனங்களை மியூட் செய்ய வேண்டும் உள்ளிட்ட சிறு திருத்தங்களை பரிந்துரை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிக ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் சில அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் தொடர்பானவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
படக்குழு அந்த மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்த பிறகும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் தமிழகத்தில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் சான்றிதழ் வரும் வரை புக்கிங்கை தொடங்க தயங்கி வருகின்றன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேநேரம், கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் புக்கிங் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "ஜனநாயகன்"... தணிக்கை சான்றிதழ் தாமதம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனநாயகன் படத்திற்கு எதிராக வந்த புகார்களை இன்று தாக்கல் செய்ய மத்திய தணிக்கை குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றம் கூறிய அனைத்து ஆவணங்களையும் சென்சார் போர்ட் தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பு சின்னங்களை பயன்படுத்த பாதுகாப்பு படை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றெடுக்க வேண்டும் என்று சென்சார் போர் தெரிவித்தது. ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்று வழங்க முடிவு செய்த பின்னர் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மார்ச்சில் எலெக்சன் தேதி அறிவிப்பு!! தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்!