தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, பாமகவை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். திமுக ஆட்சியை அகற்றுவதே இந்தக் கூட்டணியின் முதன்மை இலக்கு என அன்புமணி கூறினார். எடப்பாடி பழனிசாமியும் இதை வெற்றிக் கூட்டணி என கூறினார். இந்தக் கூட்டணி உறுதியான சூழலில், அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்க முடியவில்லை. சேலம், கள்ளக்குறிச்சியில் கட்சி நிகழ்ச்சிகள் இருந்ததால் அப்போது சந்திக்க இயலவில்லை என எடப்பாடி விளக்கினார்.

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போன்றவை குறித்தும் விவாதித்ததாகக் கூறினார். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் நாளை சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!
டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக இபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் நாளை நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக குழுவினர் ஐந்து பேர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசிக்க உள்ளனர். தொகுதி உடன்பாடு குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “நேர்காணல் தேதியில் மாற்றம்; இபிஎஸ்-ஸின் அடுத்த பிளான்!” ஜனவரி 11, 12 நேர்காணல்கள் ஒத்திவைப்பு; அதிமுகவினர் குழப்பம்!