சென்னையில் இன்று வெயில் தகித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அதாவது சுமார் 104 முதல் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை செல்லக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைக்கு மேல், கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக ஈரப்பதம் நிலவுவதால், உடல் அசௌகரியம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும், வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் சேர்க்கை காரணமாக 'ஹீட் இன்டெக்ஸ்' அதிகரிக்கும். இது உடலில் வெப்,ப அழுத்தத்தை ஏற்படுத்தி, சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், வெளிப்புற வேலை செய்பவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் ஹாட் அண்ட் ஹ்யூமிட் வானிலை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 10 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டியிருந்தால், தண்ணீர் அதிகம் அருந்தவும், லேசான பருத்தி உடைகளை அணியவும், தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஜீன்ஸ், லெக்கின்ஸ் போடாதீங்க..! கடும் வெயிலால் அபாயம்..! மருத்துவர்கள் எச்சரிக்கை..!
வீட்டிற்குள் இருப்பவர்களும் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்து, ஏசி அல்லது விசிறியைப் பயன்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் வெப்பநிலை இன்னும் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்றாலும், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் காரணமாக உணரப்படும் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த நிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெயிலும்... மழையும்..! வார்னிங் கொடுத்த வானிலை மையம் ..!