அரசு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் சான்றுதல்கள் வாங்கவும் கட்டணம் செலுத்தவும் அரசு அலுவலகங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் வாட்ப் வாயிலாக வழங்கப்படும் என மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம் 9445061913 என்ற வாட்ப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரே ஒரு எண் மூலம் எளிதில் அணுகக்கூடிய வகையில் சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணிற்கு ஹாய் அல்லது வணக்கம் என பதிவிட்டால் மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டுதலுடன் உள்நுழைந்து பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது, புகார் பதிவு, வர்த்தக உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாய கூடம் முன்பதிவு நீச்சல் குளம் முன்பதிவு, செல்ல பிராணிகளின் உரிமம் பதிவு, கடை வாடகை செலுத்துதல் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து வாட்ஸ் அப் சாட்பாட் வாயிலாக பெற்றிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டுல நாய் வளர்க்குறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த அலர்ட்! சென்னை கார்ப்பரேஷன் கறார்
இதே போன்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பின்படி கியூஆர் கோடு மூலம் சொத்துவரி உள்ளிட்ட மாநகராட்சிக்கான வரிகளை செலுத்துவதற்கான திட்டத்தையும் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இதன் மூலம் அனைத்து வகையான சொத்து வரிகளையும் இருந்த இடத்தில் இருந்தே கியூஆர் கோர்டு மூலமாக ஸ்கேன் செய்து செலுத்த முடியும். இந்த சேவையானது தற்போது மெட்ரோ மற்றும் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இ சேவை மையங்கள், மாநகராட்சிகளில் இருக்கக்கூடிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பகுதிகளிலும் கியூ ஆர் கோர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வருக்கு நன்றி.. தூய்மை பணியாளர்கள் மாபெரும் பேரணி..! உணவு பரிமாறிய மேயர் பிரியா..!