ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஊர்க்காவல் படை வீரர் - போலீசார் தீவிர விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரும் ஆணம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். சோனியா தற்போது 5மாத கர்ப்பிணையாக உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல எனது மாமியார் வீட்டில் இருந்த சோனியாவிற்கும் அவரது கணவர் சோமசுந்தரத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோமசுந்தரம் மனைவி சோனியாவை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை பழிவாங்க இளைஞர் செய்த காரியம்... இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி...!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த சோனியாவின் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
திருமணம் ஆகி 6 மாதத்திற்குள் கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!