இந்தியாவின் 79 ஆண்டு சுதந்திர தின விழா நாளை கோளகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்று வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சிறப்புரையாற்றுவதுடன் இந்த ஆண்டுக்கான பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிப்பார். இந்த நிலையில் சுதந்திர தின விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிஜிபி சங்கர் ஜீவால் உள்ளிட்டோர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பிறந்த நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று NO NONVEG விற்பனை.. மராட்டிய மாநிலத்தில் கிளம்பிய எதிர்ப்பு..!!
இதேபோல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் மாநிலம் மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை, பத்திரப்பள்ளி, பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பல்வேறு கோவில்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் கோட்டை, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநில மாவட்ட எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தின விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே..!!