இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த அறிவிப்பு, விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காகவும், பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 14-ந்தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17-ந்தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06028) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.
இதையும் படிங்க: 79வது சுதந்திர தின விழா ஒத்திகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!
வருகிற 14, 16 ஆகிய தேதிகளில் மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த தேதிகளில் மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06041) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக 15, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06042) மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது.
வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 14-ந்தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06089) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17-ந்தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06090) மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (08.08.2025) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதெல்லாம் என்ன பழக்கம்? ED குரூர புத்தியோடு நடந்துக்க கூடாது.. சுப்ரீம்கோர்ட் காட்டம்..!