பகல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி சில தீவிரவாதிகளை கொன்றது. ஆனால் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது அதனை இந்தியா முறியடித்து வருவதுடன் பாகிஸ்தானின் பல இடங்களில் பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் பல நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டன. இருப்பினும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் வாழும் குடியிருக்க பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் நம் விதிமுறைகளின்படி பதிலடி கொடுப்போம் என்றும் அரசாங்க ஆதரவோ அல்லது பயங்கரவாத மூளையோ, எந்த வேறுபாடும் இல்லாமல் பதிலடி இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கூறினார். மேலும், தீவிரவாதிகளை அவர்களின் மறைவிடங்களில் அழிப்போம், அவர்களை பூமியின் எல்லைகள் வரை துரத்துவோம் என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் 40 முதல் 50 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற தகவலின் பெயரில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியானது. இதன் பேரில், கத்துவா, உதம்பூர், டோடா, ரஜௌரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்படுபவர்கள் என பாதுகாப்பு படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “போலாம் ரைட்...”... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து... கிரீன் சிக்னல் காட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்...!
இதையும் படிங்க: 9ம் தேதி ஆட்டோ, பேருந்துகள் ஓடாது... காரணம் இதுதானாம்; பொதுமக்கள் அதிர்ச்சி!!