இளம் தலைமுறையின் இன்ஸ்டாகிராம் காதல் மோகம் என்பது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு முக்கியமான சமூகப் பண்பாட்டு நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஒரு சமூக ஊடக தளமாக, புகைப்படங்கள் மற்றும் குறு வீடியோக்கள் மூலம் தனிநபர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மேடையாக மட்டுமல்லாமல், காதல் உறவுகளின் தொடக்கம், வளர்ச்சி மற்றும் வெளிப்பாட்டிற்கு ஒரு முக்கிய களமாகவும் மாறியுள்ளது.
இளைஞர்கள் இந்த தளத்தை தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உறவுகளைப் பராமரிக்கவும், புதிய உறவுகளை உருவாக்கவும் பயன்படுத்துகின்றனர். இதன் பின்னணியில் சமூக, உளவியல் மற்றும் தொழில்நுட்ப காரணிகள் இணைந்து செயல்படுகின்றன.இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி முதலில் அதன் காட்சி ஊடக அம்சத்தில் உள்ளது. இளம் தலைமுறையினர் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகள் மூலம் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை அழகாக வெளிப்படுத்த விரும்புகின்றனர்.

இன்ஸ்டாகிராம் காதல் மோகத்தால் பலர் ஏமாறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதன் ஒரு பகுதியாக தான் சேலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சேலத்தை சேர்ந்த இளைஞனை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. நண்பர்களாக பல ஆரம்பித்து பின் நாட்களில் அது காதலாக மலர, தன் காதலனை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ரயிலில் 17 வயது மாணவி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அவன வெளியவே விடாதீங்க! Watermelon திவாகர் மீது ஷகீலா பரபரப்பு குற்றச்சாட்டு… அப்படி என்ன நடந்துச்சு?
ஆசை ஆசையாய் தன் காதலனைப் பார்த்துச் சென்ற மாணவியின் தங்க நகைகள், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை அந்த இன்ஸ்டாகிராம் காதலன் பறித்துக் கொண்டு ஏமாற்றியதாக தெரிகிறது. இதனை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சண்டை போட்டுக்காதீங்க! உட்கட்சி பூசல் இருக்கவே கூடாது... அமித்ஷா கறார் உத்தரவு..!