நடிகை சகிலா, தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று கூறிக்கொண்டு யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பிரபலமானவர் திவாகர். தான் சிறப்பாக நடிக்கிறோம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க, யாரோ அவரது மூளையில் நீ சிறப்பாக நடிக்கிறாய் என்று நம்ப வைத்து விட்டார்கள் என்ற பலதரப்பட்ட கமெண்ட்டுகள் அள்ளி வீசப்படும். அவர் நடிப்பை கோமாளிக்கூத்து என்று விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கவின் ஆணவ படுகொலை விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சகிலா குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் திவாகர் பேசியதாகவும், இது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: என் உயிருக்கே ஆபத்து.. ஆதவ் அர்ஜுனா போலீசில் பரபரப்பு புகார்..!
சகிலாவின் புகாரின்படி, திவாகர் தனது யூடியூப் சேனல் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் சாதி அடிப்படையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆணவக் கொலைகள், குறிப்பாக சாதி வேறுபாடுகளால் நிகழும் வன்முறைகளை நியாயப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் வகையில் அவர் பேசியதாக சகிலா குற்றம்சாட்டியுள்ளார். இது சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதோடு, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும் உள்ளது என்று அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திவாகரின் பேச்சு., குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் சகிலா கூறியுள்ளார்.
இது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும், சமூக நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளியிட வேண்டும் என்றும், தவறான கருத்துக்கள் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்தப் புகாரை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கடமையை செய்யாத தேர்தல் கமிஷன்!! தேசிய அளவில் நடந்த ஓட்டு மோசடி.. கொந்தளிக்கும் ராகுல்காந்தி!!