• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாய்மாமன் தடியடி திட்டமா முதல்வர் விஜய்? செவிலியர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக கடும் கண்டனம்!

    தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் என்று போட்டுவிட்டு தாய்மாமன் தடியடித் திட்டம் ஒன்றை முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாரா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Oct 2026 15:03:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Is This Thaimaman Lathicharge Scheme, CM Sir?": DMK Doctors' Wing Slams Police Action on Protesting Nurses.

    நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடிய செவிலியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து நிர்வாகிகளைக் கைது செய்ததோடு, குழந்தைகளுடன் போராடியவர்கள் மீது காவல்துறையை வைத்துத் தடியடி நடத்தியுள்ள இந்த அரசு 'தாய்மாமன் தடியடித் திட்டத்தை' நடத்துகிறதா என்றும், தமிழகத்தில் தவெகவின் ஆட்சி காவல் துறையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு போலீஸ் ஆட்சியாக  மாறிவிட்டது என்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திமுக நிர்வாகிகள் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி, திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர்கள் சையது ஆபீஸ் மற்றும் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது மருத்துவர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி பேசுகையில், "நேற்று நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்காமல் சக பெண் மருத்துவராகப் பார்க்கிறேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 24 மணி நேரமும் மக்களுக்குச் சேவை செய்தவர்கள் நம் செவிலியர்கள். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரமும் ஊதிய உயர்வும் வேண்டும் என்றுதான் அவர்கள் அமைதியாகப் போராடினார்கள். ஆனால் அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் 5 முக்கிய நிர்வாகிகளைத் திட்டமிட்டு கைது செய்துவிட்டனர். நள்ளிரவில் உண்ணாவிரதம் இருந்த செவிலியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதோடு, குழந்தைகளோடு வந்திருந்த செவிலியர்களைக் காவல்துறையினர் கண் வீங்கி சிவந்து போகும் அளவுக்கு மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    DMK

    'நண்பா, நண்பீஸ், குட்டீஸ்' என்று பேசிவிட்டு இன்றைக்கு அதே குழந்தைகளைப் போலீஸை வைத்து அடிக்க வைக்கிறாரே, இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்? தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் என்று விளம்பரம் செய்துவிட்டு, இப்போது 'தாய்மாமன் தடியடித் திட்டம்' ஒன்றை முதலமைச்சர் விஜய் ஏற்பாடு செய்துள்ளாரா? மாதத்திற்கு வெறும் 20,000 முதல் 21,000 ரூபாய் ஊதியத்தை வைத்துக்கொண்டு அதிக பணிச்சுமையுடன் செவிலியர்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அண்டை மாநிலங்களில் நல்ல ஊதியமும் அங்கீகாரமும் வழங்கும் நிலையில், இங்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்" என்று ஆவேசப்பட்டார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் சையது ஆபீஸ், "இந்த அரசு எளிய மக்களுடனோ அல்லது போராடுபவர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தவே தயாராக இல்லை. பேச்சுவார்த்தைக்கு அனுமதி பெற்றுத்தான் செவிலியர்கள் குழு போராடியது. கடந்த காலங்களிலும் அவர்கள் போராடினார்கள்; ஆனால் அப்போதெல்லாம் காவல்துறையை வைத்து இப்படிப்பட்ட அடக்குமுறை ஏவப்படவில்லை. அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது செவிலியர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த ஆதவ் அர்ஜுனா இன்றைக்கு அமைச்சராக இருக்கிறார். ஆனால் இன்று பேச்சுவார்த்தைக்கு அமைச்சரோ சுகாதாரத்துறைச் செயலாளரோ வரவில்லை. 

    மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட சமாதானம் பேச வரும் தூதர்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள். ஆனால் பேச்சுவார்த்தைக்குத் தலைமைச் செயலகம் வந்த செவிலியர் பிரதிநிதிகளைக் கைது செய்து ஒரு சர்வாதிகார போலீஸ் ராஜ்ஜியத்தை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்களை மிரட்டியது இந்த அரசு. நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து அச்சுறுத்தும் இத்தகைய அராஜகச் செயல்களை ஒரு ஜனநாயக அரசு செய்யலாமா? தாய்மாமன் சென்டிமென்ட் பேசும் முதலமைச்சர் விஜய், செவிலியர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share