புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு சென்றது தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை பட்டி, தொட்டி எல்லாம் பறைசாற்றியுள்ளது.
\தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் அம்மன் புற்றாக உருவெடுத்து அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக மூலவரான அம்மனுக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் வந்து வேப்பிலை விரித்து அதன் மீது படுத்து அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அம்மை நோய் விலகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தஞ்சை மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்
இதையும் படிங்க: 'அது மட்டும் நடந்தா மறுநாள் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்' - அன்புமணி பகிரங்க மிரட்டல்
. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு, புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது .

இதனை ஒட்டி கடந்த 7ம் தேதி யாக மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது 6 கால பூஜைகள் பூரணாஹதியுடன் நிறைவு பெற்றதும். சிவாச்சாரியார்கள் புனித நீர் கடத்தை தலையில் சுமந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் சிவ கணங்கள் இசைக்க வழியெங்கும் பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் கொண்டு வந்ததும்
10 மணிக்கு விமான கோபுரம் ராஜகோபுரம் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

. புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் , குடமுழுக்கு கொண்டாட்டத்தில் புன்னைநல்லூரியில் வசிக்கும் இஸ்லாமியர்களும் பங்கேற்றனர். மாரியம்மனுக்கு மகிழ்ச்சியோடு சீர் வரிசை எடுத்து வந்தது மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசர கால விடுப்பு... எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு....