திருத்தணி ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கே. சூரஜ் என்பவர், நான்கு 17 வயது சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயிலில் பயணிக்கும்போதே அவர்கள் சூரஜின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். சூரஜ் அவர்களை முறைத்துப் பார்த்ததாக தவறாக எண்ணியோ அல்லது வெறுமனே ரீல்ஸ் உள்ளடக்கத்துக்காகவோ அவரைத் தாக்கத் தொடங்கினர்.
ரயில் திருத்தணி நிலையத்தை அடைந்ததும் அவரை கட்டாயப்படுத்தி இறக்கி, அருகிலுள்ள கைவிடப்பட்ட ரயில்வே குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். நான்காவது சிறுவர் இத்தாக்குதலை மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை அமையட்டும்... EPS ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!
திருத்தணியில் போதை இளைஞர்களால் வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தின் போது செல்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது கஞ்சா நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மா. சு..! விளாசிய இபிஎஸ்...!