ஜெயங்கொண்டம் அருகே அசுத்தமான குடிநீர் வருவதாக முறையிட்ட மக்களின் தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் எம்எல்ஏவின் காரை மறித்து முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டு போட்ட மக்கள் சுகாதாரமான தண்ணீர் கொடுங்க என்று கேட்டால் எம்எல்ஏ செய்யும் செயல் இதுதானா? என்று வேதனை தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழாவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் இன்று பங்கேற்றார். அப்போது தாதம்பேட்டை தெற்கு தெருவில் கடந்த சில மாதங்களாக கலங்களாகவும், சேரும் சகதியமாகவும் குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தாதம்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் பங்கேற்றார். பின்னர் பணியை முடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு தனது காரில் புறப்பட்டு சென்றபோது, அங்கிருந்தபொதுமக்கள் சிலர் கலங்கிய தண்ணீர் பாட்டிலுடன் எம்எல்ஏவின் காரை நோக்கி வந்தனர்.
அப்போது தங்கள் பகுதியில் அசுத்தமான குடிநீர் வருவதாகவும், சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என ஜெயங்கொண்டம் எம்எல்ஏவிடம் முறையிட்டனர். அதனை ஏற்றுக் கொண்டு தண்ணீர் வருவதற்கு உரிய ஏற்பாடு செய்து தருகிறோம் என்று எம்எல்ஏ தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..!!
இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் கலங்கலான தண்ணீர் பாட்டிலை காண்பித்து இந்த தண்ணீரைத் தான் நாங்கள் குடித்து வருகிறோம் என்று மேலும் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திடீரென பொதுமக்களின் தண்ணீர் பாட்டிலை பிடுங்கி வேகமாக எறிந்தார்.
சற்றும் எதிர்பாராமல் இதனைப் பார்த்த அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரில் புறப்பட்டு வேகமாக சென்றார். இதில் மேலும் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏவின் காரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்த போலீசார் முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்எல்ஏவின் காரை வழி அனுப்பினர். பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் ஓட்டு போட்டு எம்எல்ஏவாக நாங்கள் தான் ஜெயிக்க வைத்தோம். நாங்கள் போட்ட ஓட்டால்தான் அவர் எம்எல்ஏ ஆனார்.
குடிப்பதற்கு நல்ல குடிநீர் கொடுங்க என்று கேட்டால் தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிவது எந்த விதத்தில் நியாயம் என்றும் மீண்டும் இந்த வழியாகத்தானே எம்எல்ஏ வரவேண்டும் அப்போது நாங்கள் மறித்து போராட்டம் செய்கிறோம் என்றும் எச்சரித்தனர்.
இதனை அறிந்த எம்எல்ஏ பிரச்சனைக்குரிய அந்த வழியில் வந்தாள் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்பதை அறிந்த எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் பின்னர் அந்த வழியில் வராமல் மாற்றுப்பாதையில் சென்று அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தாதம்பேட்டை புதுத்தெரு கிராமத்தில், கடந்த நான்காண்டுகளாகவே, மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வரை, பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை சுத்தமான குடிநீர் வழங்க… pic.twitter.com/mnYrMawes3
— K.Annamalai (@annamalai_k) July 22, 2025
இதையும் படிங்க: “அப்ரூவராகி உண்மையைச் சொல்கிறேன்” - சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...!