இந்தியாவில் 4 செமி கண்டக்டர் ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
ஒரு ஆலையை தமிழகத்தில் நிறுவ தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்ததாக கூறினார். இதன் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய ஒரு ஆலையை மத்திய அரசு குஜராத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் ஆலை என்ற நிபந்தனையுடன் செமி கண்டக்டர் ஆலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
3 செமி கண்டக்டர் ஆலைகளை தெலுங்கானாவில் நிறுவ விண்ணப்பிக்கப்பட்டதாகவும், நான்கில் ஒரு ஆளை ஆந்திராவில் நிறுவ வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நாட்டின் 79வது சுதந்திர தினம்! ஒரு லட்சம் போலீசார் குவிப்பு... பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்..!

இதில் இரண்டு ஆலைகளை குஜராத்தில் நிறுவ வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்ததாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு வரவேண்டிய ஒரு ஆலையையும் மத்திய அரசு குஜராத்திற்கு மாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் ஆலையை மத்திய அரசு குஜராத்திற்கு மாற்றிவிட்டதாக ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #வானிலை நிலவரம்: லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...