ஜெ. தீபா என்று அழைக்கப்படும் தீபா ஜெயக்குமார் தமிழ்நாட்டு அரசியலிலும், ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு விவகாரங்களிலும் பலரால் அறியப்பட்ட பெயர். 1974 நவம்பர் 10-ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள்.
ஜெயலலிதா 2016-இல் மறைவுக்குப் பிறகு தீபா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2017-இல் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜெயலலிதாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆர். பாரம்பரியத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதே இதன் நோக்கம் என்று அறிவித்தார்.

அப்போது ஜெயலலிதா சாயலில் தோற்றம், பேச்சு முறை ஆகியவை காரணமாக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றார். ஆனால் 2019-இல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் முக்கியப் பங்கு வகித்தனர். போயஸ் கார்டன் வீட்டை அரசு நினைவிடமாக அறிவித்தபோது எதிர்த்து வழக்கு தொடுத்தனர். பல ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 2020-இல் சென்னை உயர் நீதிமன்றம் இருவரையும் ஜெயலலிதாவின் நேரடி சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்தது. அதன்பிறகு 2021-இல் வேதா இல்லத்தின் உரிமையைப் பெற்றனர்.
இதையும் படிங்க: தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசு..! ரொம்ப அலட்சியம்... EPS கண்டனம்..!!
இதனிடையே ஜெ.தீபா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன் என்றும் சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம் என்றும் ஆனால் அவர் மதிக்க கூட இல்லை எனவும் கூறி உள்ளார். என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது என்றும் என்னை ஒதுக்க அவர் யார் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000...! ஜெ. பிறந்தநாளில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய EPS..!!