குடியிருப்பு பகுதிகளில் கூட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படுவது பல சமயங்களில் சமூக ஒற்றுமையையும், ஆன்மீக உணர்வையும் வளர்க்கும் ஒரு நற்பயிற்சியாக இருக்கலாம். இருப்பினும், இது சில பிரச்சனைகளையும் உருவாக்கலாம். கூட்டு பிரார்த்தனைகளின் போது உரத்த ஒலிபெருக்கிகள், பாடல்கள், மணி ஒலிகள் அல்லது மந்திர உச்சாடனங்கள் பயன்படுத்தப்படுவது பொதுவானது. இவை அருகிலுள்ள மக்களுக்கு ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள், மற்றும் குழந்தைகள் போன்றவர்களுக்கு உரத்த ஒலி தூக்கமின்மை அல்லது மன அழுத்தத்தை உருவாக்கலாம். படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு காலங்களில் மாணவர்களின் கவனம் சிதறலாம். மேலும், வீட்டிலிருந்து பணிபுரியும் நபர்களுக்கு ஒலி மாசு பணி உற்பத்தித்திறனை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தின் கூட்டு பிரார்த்தனை மற்ற மதத்தினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனைகள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்படலாம். மேலும், ஒரு குழுவினரின் பிரார்த்தனைகள் மற்றவர்களை ஒதுக்கப்பட்டதாக உணர வைக்கலாம். குடியிருப்பு பகுதிகளில் கூட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படும் நேரமும், இடமும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். உதாரணமாக, இரவு நேரங்களில் நடைபெறும் பிரார்த்தனைகள் மற்றவர்களின் தூக்கத்தை பாதிக்கலாம். நீண்ட நேரம் நடைபெறும் நிகழ்ச்சிகள் பொது இடங்களை ஆக்கிரமிக்கலாம்.
இதையும் படிங்க: சீப்பை மறைத்தால் கல்யாணம் நிக்குமா.. தவெக தொண்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்! கடும் குற்றச்சாட்டு..!
இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் கூட்டுப் பிரார்த்தனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அனுமதி பெறாமல் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக ஒலிக்கும் இசை மற்றவர்களின் காதுகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!