பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.

மேலும் 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கபடி போட்டிகள் அக்டோபர் 23 அன்று தொடங்கி, 31 வரை நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் வென்றுள்ளது. இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பஹ்ரைனில் நடந்த கபடி போட்டியில் தங்கப்பதக்கம் என்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் மோன்தா CYCLONE... சென்னைக்கு 950 KM தொலைவில் புயல் சின்னம்... வானிலை மையம் அறிவிப்பு...!
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்ததாகவும் இன்று உலகமும் வியப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி கபடியில் தங்கம் வென்ற அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை என்றும் மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: SIR ஒரு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த விசிக வலியுறுத்தல்...!