தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது.

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேங்கிய மழை நீர்... சாக்கடை குழிக்குள் விழுந்த குழந்தை... பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!
சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், 27 ஆம் தேதி ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாட்டின் முதன்மைத் தலைநகரமாக இருப்பதால், வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இதன் கடற்கரைப் பகுதிகளை அடிக்கடி தாக்குகின்றன. 2015 டிசம்பர் மாதத்தில் உருவான காற்றழுத்த மண்டலம் சென்னையை கடுமையாகத் தாக்கியது. 2016 டிசம்பர் 11 அன்று புயல் வர்தா சென்னைக்கு நேரடி அச்சுறுத்தலாக வந்தது. 2018 ஜூலை மாதத்தில் கஜா புயல் தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கரையைத் தாக்கியது. 2021 டிசம்பர் 17 அன்று புயல் மண்டூஸ் சென்னை அருகில் கரையெட்டியது. சென்னையை வெகுவாக பாதித்தது. 2023 டிசம்பர் 3 அன்று புயல் மிச்சாங் சென்னையை மிகக் கடுமையாகத் தாக்கியது. 2024 நவம்பர் 30 அன்று புயல் ஃபெங்கல் சென்னைக்குப் பெரும் பாதிப்பை கொடுத்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மோன்தா என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னையை நெருங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. சென்னைக்கு 950 km தொலைவில் நகர்ந்து வருவதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை வெளுத்து வாங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த புயல்களின் போது சென்னை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த புயல் எந்த மாதிரியான பாதிப்பை கொடுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த புயல் மேலும் வலுவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… சும்மா பூந்து விளாச போகுது மழை… எச்சரிக்கை..!