திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த இளம் பெண் ரிதன்யா திருமணமான 78 நாட்களில் தனது கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டார். அது மட்டும் இல்லாம மாமனார் மாமியார் இணைந்து வரதட்சனை கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். நம்மால் இனிமேலும் வாழ முடியாது எனக் கூறி தன் அப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இளம் பெண் ரிதன்யா மரணத்தை பொருத்தவரை, அவருக்கு தேவையான இடம் கொடுக்கப்படவில்லை என்று கூறினார். இன்று இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்து திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்கள் 300 சவரன் போதவில்லை இன்னும் 200 சவரன் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிரதன்யாவின் குரலை தான் கேட்டதாகவும், திருமணம் ஆகி 78 நாட்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்பட்ட அவர், யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார் என்பதை காட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தளபதி கோட்டை.. அவர் FIELD-க்கு வந்தாருன்னா..! அருண் ராஜ் பவர் ஸ்பீச்..!

நிறைய பெற்றோர் பொறுத்து போய் வாழ வேண்டும் என்று தான் கூறுவதாகவும், கணவன் அடித்தால் கூட குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் அஜித் குமார் மரணம் தொடர்பாக பேசிய காளியம்மாள், ஒரு உயிரை எடுக்கக்கூடிய அதிகாரம் இவர்களுக்கு எப்படி வழங்கப்பட்டது என்றும் உங்களுக்கு அடித்தாலும் வலிக்கும் எனக்கு அடித்தாலும் வலிக்கும் அப்படி இருக்கும் சூழ்நிலையில், சக மனிதனின் வாயில் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றுவது, பிறப்புறுப்பில் மிளகாய் தூள் வைப்பது போன்றவை எவ்வளவு அரக்கத்தனமான விஷயம் எனது தெரிவித்தார்.

இது அதிகாரத்தின் உச்சத்தை காட்டுவதாகவும், ஒருவரை கைது செய்து கொண்டு போகும்போதே வாடா போடா என பேசும் சில அதிகாரிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அத்துமீரும் அதிகாரிகளை இடைநீக்கம் செய்வது போன்றவை செய்யாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும், சட்டம் கடுமையாகப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவோடு இணைப்பு தான் இருக்கு.. பிணைப்பே இல்லங்க! அதிமுக கூட்டணி குறித்து திருமா நச் பதில்..!