மதுரை அழகர் கோவில் பெயர் பதாகையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற அழகர் கோவில், ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவில் பெயர் பதாகையில் தமிழ் பெயர் நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், கோவில் பெயர் பதாகையில் இடம்பெற்றிருந்த தமிழ் பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!
மேலும், சரியான பெயர் இடம்பெற்றுள்ள பதாகையின் புகைப்படத்தையும் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்த வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கோவில் முகப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!