சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 15-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார், கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மற்றும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
அவரது பேச்சில், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், சனாதனம் மற்றும் சர்வாதிகாரத்தின் சங்கிலிகளை உடைக்க ஒரே ஆயுதமாக கல்வியை குறிப்பிட்டார். கல்வியும் அன்பும் ஒருசேர கிடைப்பது அரிது. அது அம்மாவிடமும், அகரத்திலும் கிடைக்கிறது. சினிமாவில் நட்சத்திரமாக இருப்பதற்கு ஒரு கிரீடம் கிடைக்கும்.
இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்
ஆனால், சமூகத்தில் நற்பணி செய்பவர்களுக்கு முள்கிரீடமே கிடைக்கும். அதற்கு மனோபலமும் தைரியமும் தேவை. ஏனெனில், ஆரம்பத்தில் யாரும் உடன் நிற்கமாட்டார்கள். தண்டி யாத்திரை தொடங்கும்போது கூட்டம் குறைவாகவே இருக்கும், பின்னர் அது பெருகும் என்று அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மேலும், அவர் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும்போது, சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால், பெரும்பான்மை மூடர்கள் உங்களைத் தோற்கடித்துவிடுவார்கள். அறிவுக்கு வேலை இருக்காது என்று கூறினார்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் நடிகர் கமல்ஹாசனின் சங்கை அறுத்துவிடுவேன் என்று கூறி விமர்சித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நீதி மய்யம் துணை தலைவரும் ஓய்வு பெற்ற ஐ.ஜியுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சனாதனத்திற்கு எதிராக பேசிய கமலஹாசனுக்கு நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் அந்த காட்சியை ஒளிபரப்பிய தனியார் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: லியோ சாதனை முறியடித்த கூலி திரைப்படம்... விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்