கேரளாவில் கல்லாய் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சக்கரத்தில்bபாய்ந்து தற்கொலைக்கு இளைஞர் ஒருவர் முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் சக்கரத்தில் பாய்வதை பக்க கண்ணாடி வழியாக கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சட்ன் பிரேக் போட்டு நிறுத்தியதால் நூலிழையில் இளைஞரின் உயிர் தப்பியது.
இளைஞர் எதற்காக சக்கரத்தில் விழுந்தார், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன, யார் அந்த இளைஞர், மது போதையில் இவ்வாறு செய்தாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கவுந்திரா மருத்துவக் கல்லூரி அருகே தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று உள்ளது. கல்லாய் என்ற பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு பேருந்து புறப்பட்டது. அப்போது சாலையின் எதிர் புறத்திலிருந்து ஓடி வந்த ஒரு இளைஞர் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் பாய்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

தற்கொலைக்கு முயன்ற இளைஞர் விழுந்ததை கண்டு சுதாரித்துக்கொண்ட பேருந்தின் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்துள்ளார். இதனால் சிறிதும் காயம் இல்லாமல் அந்த இளைஞர் தப்பியுள்ளார். பேருந்து பிரேக் அடித்து நின்றவுடன் உடனே எழுந்த அந்த இளைஞர் நடத்துனரை பார்த்தபடியே நடந்து சென்றுள்ளார்.
பேருந்து வேகமாக சென்று இருந்தாலோ அல்லது ஓட்டுநர் பக்க கண்ணாடியை பார்த்து சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தாமல் இருந்திருந்தாலோ பெரும் விபத்து ஏற்பட்டு இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஓட்டுனரின் செயலால் இளைஞரின் உயிர் தப்பியது. இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து பின்பக்க சக்கரத்தில் இளைஞர் பாயிண்ட் தற்கொலைக்கு முயன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படிங்க: எங்கடா கை வெக்குற நாயே..! பேருந்தில் சில்மிஷம் செய்தவனை புரட்டி எடுத்த பெண்..!