குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீக்கிரமே நல்ல முடிவு வரும்! 10வது நாளாக போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் சண்முகம் சந்திப்பு

ஸ்டாலின் வாக்கு கேட்கும் போது வாக்குறுதி கொடுத்தது உண்மைதான் என்றும் அதனை நம்பி தான் அவருக்கு ஓட்டு போட்டதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி நம்ப வைத்து வாக்குகளை வாங்கிவிட்டு, ரோட்டில் போராட வைத்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
பின் கதவு வழியாக வந்து செல்கிறார்கள், எங்கள் முன் ஏன் வர மறுக்கிறார்கள் என்றும் கேட்டுள்ளனர். நாங்கள் சேகர்பாபுவை கேட்கவில்லை என்றும் மேயர் பிரியாவிற்கு பேச தெரிகிறதா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இத்தனை வருடங்கள் வேலை செய்துவிட்டு நாங்கள் காண்ட்ராக்டில் எப்படி செல்வோம் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு