தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்கள் தவிர்த்து ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை
இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். இதன் மூலம் டெல்லி அரசியலில் முதல் முறைக்காக கமல்ஹாசன் கால் பதிப்பது உறுதியானது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு நாளை நடைபெற உள்ளது. மாநிலங்களவை எம்பியாக கமல்ஹாசன் பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று டெல்லி புறப்பட்ட சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியனாக தனக்கு கொடுக்கப்பட்ட கடமையைச் செய்ய இருப்பதாகவும் பெருமையோடு பாராளுமன்றம் செல்வதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் கன்னி பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது என்று கூறிய கமல்ஹாசன், உங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் மக்களுடைய வாழ்த்துக்களுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்கலன்னா நடக்குறதே வேற... கே. பி. ராமலிங்கத்துக்கு விசிகவினர் பகிரங்க எச்சரிக்கை!