தெரு நாய்களை காப்பகங்களில் வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு தீர்ப்பு திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் கூட, தெருநாய்கள் தேவையா, இல்லையா என்று வாதங்கள் நடந்து வருகிறது. தெரு நாய்கள் வேண்டாம் என்பவர்கள் பொதுவாக முன் வைக்கும் கருத்து என்னவென்றால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதுதான்.
இருப்பினும் தெருநாய்கள் எல்லாமே அப்படி கிடையாது என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். தெரு நாய்களை ஒழிப்பது தங்கள் நோக்கம் அல்ல., இருப்பினும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் தங்களுக்கு பாதுகாப்பு என்று ஒரு தரப்பினரும், தெரு நாய்களால் வெளியில் வரவே முடியவில்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக பேரணி கூட நடத்தப்பட்டது.

இப்படி தெருநாய்கள் பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வரலாறு தெரிந்தவர்கள் மற்றும் சுகாதாரத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் கழுதைகளை காணவில்லை என்று குரல் கொடுத்தார்களா என்று கேட்டார்.
இதையும் படிங்க: திருமாவின் அரசியல் வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா? கமல்ஹாசன் நெகிழ்ச்சி
நமக்காக பொதி சுமந்து வந்த கழுதைகளை பார்க்க முடிவதில்லை என்றும்., அது குறித்து யாரேனும் கவலைப்படுகிறார்களா எனவும் கேட்டார். முடிந்தவரை அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய கருத்து எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சரி முடிச்சுக்குறேன்! முதலமைச்சர் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்...