சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், காமராஜர் பற்றிய சர்ச்சை விவாதம் சரியல்ல இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். கலகமூட்டி குளிர்கால நினைக்கும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் பெருந்தலைவர் காமராசரை பற்றி தமிழர் என்று போற்றியவர் தந்தை பெரியார் என்றும் கூறினார்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாயில் வடை சுடுகிறாரா ஸ்டாலின்?... ஜெயலலிதா பாணியில் வெளுத்து வாங்கிய எடப்பாடி...!
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு என்ற கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும் மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்.,வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமருக்கு வெள்ளை குடை... தமிழ்நாட்டில் வீராப்பு! யாரு கூட கூட்டணி வச்சா உங்களுக்கென்ன? இபிஎஸ் ON FIRE!