கனிமொழி கருணாநிதிக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த விருது, தமிழ்நாடு அரசால் 1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபடுவோரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக பணியாற்றியவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு இந்த மதிப்புமிக்க விருது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை உறுப்பினரும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கருணாநிதி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் ஆகியோரின் மகளாவார். இவர் இலக்கியம், இதழியல் மற்றும் அரசியல் துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தற்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் கனிமொழி, முன்னதாக மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
இதையும் படிங்க: #BREAKING: பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

இவரது அரசியல் பயணம், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்ததோடு, சமூக நீதி மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பெரியார் விருது கனிமொழிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முப்பெரும் விழாவில் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் தனது அண்ணனுமான மு.க. ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி வாழ்த்து பெற்றார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றதாகவும்., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது வாழ்த்தை தெரிவித்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!