தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது கஞ்சா வைப்பவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில் கஞ்சா வியாபாரி ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் ஆல் பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு இளைஞர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பரிந்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான நவீன் என்பவர் 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதை அடுத்து நவீன் தலைமறைவாகினார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடிவந்த நிலையில் மாரியப்பன் நகர் பகுதியில் முட்புதருக்குள் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. போலீசாரை கண்டதும் நவீன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாக தெரிகிறது. இதை எடுத்து காவல்துறையினர் பிடிக்கும் முழன்ற போது கத்தியை காட்டி நவீன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!
பிடிக்க முயன்ற காவலர் ஐயப்பனை நவீன் கத்தியால் வெட்டியதாக கூறப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டுள்ளார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்து உள்ளது. நவீனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து தாக்கும் போதை ஆசாமிகள்... போலீஸ் கண்டுக்கல?.. மறியலில் குதித்த மக்கள்...!