குமரியில் மலையோர பகுதிகளில் தொடரும் மழை. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு முதல் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மலையோர பகுதிகள் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மழை நீடித்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டிய நிலையில் முதலாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று விடப்பட்டுள்ளது. மேலும் அணை 46 அடி கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதையாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் களியல், திற்பரப்பு, மூவற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சென்றடையும் என்பதால் கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் |பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கதி கலங்கிப்போன தமிழகத்தின் கடைக்கோடி... கனமழையால் கதறும் கன்னியாகுமரி மக்கள்...!
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை :
நேற்று இரவு முதல் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு திற்பரப்பு அருவியில் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரோஷமாக தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்த வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் , அணைகள் நிரம்பி வருகின்றன குறிப்பாக பேச்சிபாறை அணையின் நிர்பிடிப்பு 48 அடி தற்போது 42 அடியை தாண்டி உள்ளது தற்போதும் மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோதை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால்
குமரியின் குற்றாலம் என்று அழைக்கபடும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தடுப்புகளை தாண்டு வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க: #BREAKING அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!