ஓசூர் அருகே சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக் கோவில் கண்டுபிடிப்பு தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகிலேயே பெகிலி என்ற சிறிய கிராமத்தில் இந்தக் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இது சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்திய கட்டமைப்பாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலை கண்டறிந்தவர் காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜெயலட்சுமி ஆவார். அவர் தொல்லியல் ஆர்வலராகவும் பல ஆண்டுகளாக ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்.

பெகிலி கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரத்தால் மறைக்கப்பட்டு, மண்ணுக்குள் பாதியளவு புதைந்த நிலையில் இருந்த இந்தச் சிவன் கோவிலை அவர் கவனமாக ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தார். கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆவணப்படுத்தும் குழுக்களின் உதவியுடன் இந்தக் கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. கோவிலின் கட்டமைப்பு பிற்கால சோழர் காலத்திய சிறப்பியல்புகளை தெளிவாகக் கொண்டுள்ளது. கருவறை, மண்டபங்கள் போன்ற அமைப்புகள், சில கல் செதுக்கல்கள் மற்றும் கோவிலின் அடிப்படை வடிவமைப்பு ஆகியவை அக்கால சோழர் கோவில்களின் பாணியை நினைவூட்டுகின்றன.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 கோவில் குடமுழுக்குகள்..!! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!
மண்ணால் மூடப்பட்டு, மரங்களால் சூழப்பட்டிருந்ததால் பல ஆண்டுகளாக இது மக்களின் கவனத்திற்கு வராமல் இருந்துள்ளது. இந்தக் கோவில் முற்றிலும் புதிதாகக் கட்டப்பட்டு பின்னர் புதைந்து போனதாகவோ அல்லது பழைய கோவிலின் எச்சமாகவோ இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய கூட்டம்... குறுக்கு வழியால் கைகலப்பு..!