தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது திமுக. பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட திமுக தலைமைக் கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..! 2வது நாளாக துருவித் துருவி விசாரணை..!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஓசூர் மாவட்டத்தில் முதன்முதலாக திமுகவின் தேர்தல் அறிக்கை குழு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்பு நடத்தி தேர்தல் அறிக்கைக்கு தேவையான தகவல்களை திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. திமுக தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கோவி. செழியன், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!