தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி காட்டமாக தெரிவித்தார். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: யார் மீதும் பழி போடாதீங்க…! மக்களின் பாதுகாப்பு முக்கியம்… நீதிமன்றம் திட்டவட்டம்…!
ஒரு நபர் ஆணைய விசாரணையின் போது பின்னால் நின்று காவலர் ஒருவர் தடுத்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக குறை சொல்ல முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள் என்று கூறிய நீதிபதி சிபிஐ விசாரணை கோரி தேசிய மக்கள் கட்சி உட்பட தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம்... மதுரை கிளையில் மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்...!