தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அப்பாவையே அசிங்கப்படுத்துவாரு… அவர என்னத்த சொல்ல? அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி…!
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், திமுகவின் செந்தில் பாலாஜி தான் காரணம் என லெட்டர் எழுதி வைத்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மயிலம் தொகுதியின் கிளைக் கழக செயலாளர் ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டார். கரூருக்கு விஜய் வருகையின் போது போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நன்றாக வேலை செய்ததாகவும் செந்தில் பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போலீசும் இதற்கு உடந்தை என்றும் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...!