தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான கவின்குமார், சென்னையில் ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்த சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் குறித்த விசாரணையில், கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் செய்தது தெரியவந்தது.
போலீசில் அவர் சரணடைந்த நிலையில், கவினை வெட்டிக் கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: சாதிய ஆணவப் படுகொலை! வாக்கரசியலுக்காக அம்போனு விடுவீங்களா?சீமான் ஆவேசம்

தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும், பெண்ணின் பெற்றோர்களான எஸ்ஐ தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து நாட்களாக நீதி கேட்டு கவின் உடலை வாங்க மறுத்த போராடி வந்த உறவினர்கள், இறுதியில் கவின் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் சுர்ஜித்தை காவலி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வருவதால் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு சுர்ஜித் அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் ஒப்படைப்பு... மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!