நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கவினை கொலை செய்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்! கண்ணீர் விட்டு கதறிய சுர்ஜித்..!
சுஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் பெற்றோர்கள் அவரது உடலை 5வது நாளாக பெற்றுக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கையில் எடுத்து தங்களது விசாரணையை துவக்கி உள்ளனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கவினின் காதலி சுபாஷினி, அவரது தாய் உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி இடம் சிபிசிஐடி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
அந்த விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்த கட்டமாக கவினின் பெற்றோர் மற்றும் தம்பி உறவினர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் சுர்ஜித்தையும், அவரது தந்தை சரவணையும் விசாரித்தால் இந்த வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்கும் என அவர்கள் இருவரையும் கஸ்டடி எடுக்க சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் இன்று முதல் அதிரடி ஆரம்பம்; சிபிசிஐடி கைக்கு மாறிய முக்கிய ஆவணங்கள்...!