கீழடி அருங்காட்சியகம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை ஆற்றங்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்துள்ளது. இது 2023 மார்ச் 5 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,732 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 176.50 கோடி ரூபாய் மதிப்பிலான 109 முடிவுற்ற பணிவுகளையும், 134.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும் போது கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என்று கூறினார்.

திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டார். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டதாக தெரிவித்தார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது என்றும் பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம்... சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி... நீதிபதி சொன்ன காரணம்?
மேலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது என்றும் பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை திமுக அரசு உறுதிசெய்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடிமை அதிமுக, ஒட்டுண்ணி பாஜக... தமிழ்நாட்டு மீனவர்கள்-னா எளக்காரமா? லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்…!