தமிழ்நாட்டில் சமீபத்தில் சட்டவிரோத கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குறிப்பாக பள்ளிபாளையம் பகுதியில், சட்டவிரோதமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும், வறுமையில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக பவர் லூம் மற்றும் டையிங் மில் தொழிலாளர்கள், 5-10 லட்ச ரூபாய் பண வாக்குறுதியுடன் கிட்னி விற்க தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில், திமுகவுடன் தொடர்புடைய மருத்துவமனைகள் மற்றும் பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு திமுக அரசு மறைமுக ஆதரவு அளிப்பதாகவும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், ஆனந்தன் என்ற தரகர், உறுப்பு தானம் செய்பவர்களை ஆட்சேர்ப்பு செய்து, சட்டவிரோத மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்ததாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த சம்பவம், தமிழ்நாட்டில் மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்துவதில் திமுக அரசு தோல்வியடைந்ததை வெளிப்படுத்துவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது, நாமக்கல்லில் நடந்திருப்பது கிட்னி திருட்டு இல்லை., முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒருவருக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு என்றும் தற்போது நடந்துள்ளது முறைகேடு எனவும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: மா. சுப்பிரமணியன் நில அபகரிப்பு வழக்கு... தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!
ஒவ்வொரு ஊராகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவா முடியும் என கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் நாமக்கல்லில் கிட்னி முறைகேடு நடந்ததாக கூறினார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: தோஸ்த் முறையில சொன்னோம்! வேணாம்னா விடுங்க.. திருமாவளவன் ஓபன் டாக்..!