வானில் சர்வதேச விண்வெளி நிலையம், தென்மேற்கில் இருந்து,வட கிழக்கில் நகர்ந்து சென்ற காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நிமிடங்கள் மட்டும் தெளிவாக தென்பட்டது.
ஜீன் 25ஆம் தேதி ஆக்ஸியம் 4 என சொல்லக்கூடிய டிராகன் விண்கலம்,அமெரிக்காவில் இருந்து அனுப்பபட்டு, கடந்த 26ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது, இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, போலந்து,அங்கேரி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களும், குறிப்பாக இந்தியாவை சேர்ந்த சுபான்ஷீ சுக்லா இந்திய விண்வெளி வீரர் இந்த குழுவில் இணைந்துள்ளார்.
முதல் இந்தியர் சர்வதேச விண்வெளிக்கு சென்றது இதுவே முதன் முறையாகும், இந்த குழுவினர் வானில் 60 ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த விண்வெளி மையமானது வானில் 400 கிலோ மீட்டர் உயரத்தில்,பூமத்திய ரேகையில் இருந்து பூமியை சுமார் 51.6 டிகிரி கோணத்தில் 16 முறை தினந்தோறும் சுற்றி வருகிறது, இந்த நிகழ்வானது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அய்யோ பாவம்!! வெள்ளை வேட்டியை கழட்டி வீசிய எடப்பாடி... பங்கமாய் கலாய்த்த திமுக அமைச்சர்...!
இந்த நிகழ்வானது ஜீலை 6ஆம் தேதி துவங்கி ஜீலை 9ஆம் தேதி மாலை வேளையிலும், ஜீலை 10 ஆம் தேதி முதல் ஜீலை 12ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் 4 மணி முதல் 5 மணி வரை தென்படும் என கூறுகின்றனர், இதனையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முதல் இந்த சர்வதேச விண்வெளி மையம் நகர்ந்து செல்வது தெரிந்து வருகிறது, இதனையடுத்து இன்று சர்வதேச விண்வெளி மையமானது தென் மேற்கில் இருந்து துவங்கி,வடகிழக்கில் வானில் நகர்ந்து வந்ததை ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: என்னது 2026ல் விஜய் தான் முதல்வரா..!! படத்தில் வந்த பரபரப்பு போஸ்டர்.. ஷாக்கில் ரசிகர்கள்..!