கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கிளம்பி உள்ளனர். வேனை டிரைவர் சசிகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே தாப்பாத்தி - முத்துலாபுரம் மேம்பாலம் இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர்
மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் வந்த விஜயன்(58) என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணித்த டிரைவர் சசிகுமார் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதையெடுத்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஜயனின் மனைவி கலைவாணி(43) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஓவர் ஸ்பீடில் பனைமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுக்கிய கார்... 2 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி...!
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிபயங்கரம்...!! - நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!