திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்க பகுதியில் புதைசாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் புதைசாக்கடை குழாயில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அந்த அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளர்கள் சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரபு என்பவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவி என்பவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக புதை சாக்கடையில் உருவாகியிருந்த விஷ வாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்து உள்ளனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகளை முன் வைத்தார். சமூக நீதி எல்லாம் தேர்தல் நேரத்து சாயம் தானா என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்”.. அண்ணாமலைக்கு வாக்கு கொடுத்த ஆர்.எஸ்.எஸ்... பாஜக சைலண்ட் பின்னணி...!
பிரதமரின் நமஸ்தே திட்டம் தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வுக்கு வித்திடுகிறது என்றும் முதல்வரின் அரசோ தூய்மைப் பணியாளர்களை காவு வாங்குகிறது எனவும் கூறினார். இதுதான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்குமான வித்தியாசம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க: என்ன தலை தவெக பக்கம் திரும்புது? விஜய் சொன்னது ரைட்... ஆதரித்த அண்ணாமலை...!