வடபழனியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மாலை தருவதாகக் கூறி, இளம்பெண்ணை வடபழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் இந்த குற்றத்தை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த அசோக் பாரதி என்பவர் கோவில் சரியாக இருந்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவருக்கு தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மாலை தருவதாக கூறியுள்ளார். இதற்காக அந்த பெண்ணை தனது உறவினர் வீட்டிற்கு அசோக் பாரதி அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அங்கு அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அசோக் பாரதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில், வயிற்றுவலி தீர பூஜை செய்வதாகக் கூறி 15 வயது சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பூசாரி பழனி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் சிறுமி மூன்று மாத கர்ப்பமானது தெரியவந்ததை அடுத்து, கீரனூர் போலீசார் பூசாரியை கைது செய்தனர். இதேபோல், 2018 ஏப்ரலில் சென்னை சூளைமேடு ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயிலில், பூசாரி உதயகுமார் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் அவரை தாக்கி, மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளன.
இதையும் படிங்க: துளிக்கூட பாதுகாப்பு இல்ல! ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்.. குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..!
இதையும் படிங்க: இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!